Tamil News Trends

தினசரி முக்கிய செய்தியை தமிழ் வழி காண " Tamil News Trends"

ad728

Breaking

Friday, 23 November 2018

Jio நிறுவனம் முதலிடத்தை பிடிக்கும் வரை செல்போன் கட்டணத்தை உயர்த்தமாட்டார்கள், கருது வெளியாகி உள்ளது.


இந்தியாவில் ரிலைன்ஸ் ஜியோ வருகைக்கு பின் செல்போன் கட்டணங்கள் மிக குறைந்து விட்டது. இது வெகு விரைவில் மாறக்கூடும், அதாவது செல்போன் கட்டணம் உயருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஜியோ வருகைக்கு பின்னர் ஏர் செல் என்ற நிறுவனம் அவர்களின் கடனக்குறைவை தாக்குபிடிக்காமல் கம்பெனியை மூடிவிட்டது, மேலும் பல நிறுவனங்கள், இப்போதைக்கு இவர்களுக்கு இணையாக களத்தில் உள்ளவர்கள் பாரதி ஏர்டெல் மற்றும் வோடாபோன் . இந்த வோடபோன் நிறுவனம் ஐடியா நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது,


அந்த வகையில் இந்த ஆண்டு வோடபோன் அதிக இலாபம் ஈட்டியதா என்றால் இல்லையா, ஐடியா நிறுவனத்தை வாங்கியதால்இரண்டாவது காலாண்டில் ரூ.4,974 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர். பாரதி ஏர்டெல் இதுபோன்று இழப்பினை சந்தித்தாத்தா என்றால் இந்த காலாண்டில் ரூ.118.80 கோடி நிகர இலாபம் ஈட்டியது. ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த காலாண்டின் நிகர இலாபம் அவர்களை எண்ணியதை போல 681 கோடி ஈட்டியுள்ளது. 

இதனால் இழந்ததை பிடிக்க செல்போன் கட்டண சேவையை உயர்த்தினாலே பெறமுடியும் என்று ஏற்கனவே எண்ணையதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரிலைன்ஸ் ஜியோ தன்னுடைய கட்டண சேவையை உயர்த்துமா என்றால் அதில் தான் ஒரு கருத்து  வெளியாகி உள்ளது. தற்பொழுது இந்த சேவையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜியோ நிறுவனம் அடுத்த 6 முதல் 12 மாதத்திற்குள் தன்னுடைய வாடிக்கையாளர்களை 40 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. முதலிடத்தைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டால், அதன் பின்னர் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படலாம் என்றும், அது வரை கட்டண உயர்வு இருக்காது' என்று பிரபல பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லைன்ச் தெரிவித்துள்ள. அத்துடன் தற்போது இந்தியாவால் 100 கோடி மக்கள் செல்போன் சேவையை பயன்படுத்தி வருகின்றனர், அதில் 50 முதல் 60 சதவிகிதம் பேர் இன்னும் இன்னும் 2ஜி நெட்வொர்க்கில் இருக்கின்றனர் அதாவது. இன்னும் 4ஜி நெட்ஒர்க் பயன்படுத்தாமல் இருக்கின்றனர். அவர்களை தன்பக்கம் கொண்டுவர ரிலையன்ஸ் ஜியோ முயல்கின்றது. அதனால் மற்ற நெட்வொர்க் அதற்கு போட்டிபோட்டு கொண்டு வாடிக்கையாளரை அவர்கள் பக்கம் ஈர்க்க பல வேலைகளை செய்து வருகின்றனர். 

அதனால் ஜியோ கட்டணம் உயர்த்தும் வரை மற்ற நிறுவனம் கட்டண உயர்வை கொண்டுவராது என எதிர்பார்க்கின்றனர்.




No comments:

Post a Comment