மலையாளதில் "பிரேமம் " படத்தின் மூலம் புகழ்பெற்ற சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கு படத்திலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் அவர் நடித்த "பாடி பாடி லெட்சே மனசு" என்கிற திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் சாய் பல்லவி தயாரிப்பாளரிடம் அதிக பணம் கேட்டு அடம் பிடிப்பதாக செய்தி வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹனு ராகவபுடி என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் எடுத்து எடிட்டிங் எல்லாம் முடித்த பின் இன்னும் சில காட்சிகள் எடுத்து இணைத்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் மீண்டும் சாய் பல்லவியை அழைத்து கூறியுள்ளார். அவரும் நடித்து கொடுத்துள்ளார்.
மீண்டும் இரு காட்சிகள் இணைக்க சாய் பல்லவியிடம் இயக்குனர் கேட்டுள்ளார். அதற்க்கு சாய் பல்லவி இதற்க்கு தனியாக பணம் தரவேண்டும் என கேட்டுள்ளார். படம் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் வேறு வழியின்றி அவர் கேட்ட பணத்தை கொடுத்து அவரை வைத்து மீதும் காட்சிகள் எடுத்தனர்.


No comments:
Post a Comment