இலங்கை அதிபர் ஸ்ரீசேனாவுக்கும், பிரதமர் அனில் விக்ரம்சிங்குக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போரில் அதிபர் ஸ்ரீ சேனா கடந்த மாதம் 26-ம் தேதி அனில் விக்ரம சிங்கை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார்.
இதை தொடர்ந்து ஸ்ரீ சேனா முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதை ஏற்காதா பலரும் இராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். ஆனால் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத சூழ்நிலையை அறிந்த அதிபர் ஸ்ரீ சேனா நாடாளுமன்றத்தை கலைக்க சொல்லி உத்தரவிட்டார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு. வருகின்ற ஜனவரி மாதம் 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்த உத்தரவிட்டார் . ஆனால் கோர்ட்டின் கருத்தினை அறியாமல் பொது தேர்தல் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மத்தியில் ரனில் விக்ரம்சிங்கை தொடர்ந்து பலரும் நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளனர்.



No comments:
Post a Comment