கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வதுண்டு
"மழை பேரும் பிள்ளை பேரும் மகாதேவனுக்கே தெரியாது"
தமிழகத்திற்கு 7ம் தேதி ஆகிய இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்ததா நிலையில். அதற்க்கு எந்த ஒரு சின்ன அறிகுறியும் தெரிவது போல இல்லை , சென்னை மற்றும் இல்லாமல் தமிழகம் முழுவது மழை பெய்வதற்கான சின்ன அறிகுறிகூட தென்படவில்லை.எல்லா இடங்களிலும் வெயில்தான் அடிக்கிறது. வானம் பளிசென்று காணப்படுகிறது.
கனமழை பொய்த்ததா ? இல்லை வெதர்-ரிப்போர்ட் சில நேரங்களில் காலதாமதம் ஏற்படலாம் அதன்படி பிற்பகலுக்கு பின் மழை ஆரம்பித்து வெளுத்து வாங்குமா, உண்மையை உணரமுடியாத நிலையில் மக்கள். ஆனாலும் இன்று ஞாயிறு கிழமை என்பதால் அலுவலகம் செல்லும் நபர்கள் ஏதே நடந்தாலும் கவலையில்லை என்ற மனநிலையில் இருக்கிறார்கள் .
"மழை பேரும் பிள்ளை பேரும் மகாதேவனுக்கே தெரியாது" இந்த பழமொழியின் கதை " ஒரு முறை இந்திர தேவன் மழைக்கு அதிபதியான வருண தேவனிடம் என்னைவணங்காத இந்த நாட்டுமக்களுக்கு மழை பொழியாதே என்று கட்டளை இட்டு இருக்கிறார் . அதை ஏற்ற வருண தேவனும் அப்படியே நடத்துகிறேன் என்று கூறி சென்ற அவன் தன்னுடைய மேகங்களிடம் இந்திரன் உரைத்த நாட்டிற்கு மட்டும் மழை பெய்யக்கூடாது என்று கூறினார். வருண தேவனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட மேகங்களில் ஒரு குருட்டு மேகம் மழை பேயக்கூடாது என்று உரைத்த அந்த நாட்டில் மழை சும்மா வெளுத்தது வாங்கிடுச்சாம். இதை அறிந்த இந்திரன் கோவமுற்றான் வருணதேவனை அழைத்து உன்மேகங்கள் பண்ணியதை பற்றி கேட்டதும் ஒரு குருட்டு மேகம் இவ்வாறு செய்ததை அறிந்தான். அன்று முதல் இப்பழமொழியான "மழை பேரும் பிள்ளை பேரும் மகாதேவனுக்கே தெரியாது" என்று உரைத்ததாக கிராமத்து பாட்டி சொல்ல கதை கேட்டதுண்டு.
அதனால் மக்கள் அனைவரும் முஎச்சரிக்கையுடன் இருப்பது நல்லது முறையான உன்னேற்பாடுகளுடன் நாமும் நமது அரசும் தயார்நிலையில் இருப்பது மிகவும் நன்று . மீண்டும் ஒரு கேரளா வெள்ளத்தை சந்திக்க தேவை இருக்காது.




No comments:
Post a Comment