Tamil News Trends

தினசரி முக்கிய செய்தியை தமிழ் வழி காண " Tamil News Trends"

ad728

Breaking

Saturday, 6 October 2018

2018-ம் ஆண்டின் மேஷம் இராசியின் குரு பெயர்ச்சி பலன் (04-10-18 முதல் 27.10.19 வரை)

2018-ம் ஆண்டின் மேஷம் இராசியின் குரு பெயர்ச்சி பலன்


04.10.2018 அன்று இரவு 10.00 மணிக்கு குரு துலாம் இராசியில் இருந்து விருட்சக இராசிக்கு போகிறார். இந்த குரு பெயர்ச்சி 27.10 2019 வரை இந்த பலன்கள் . குரு மேஷராசியை 6-ம் பார்வை செலுத்துகிறார். இந்த 6-ம் பார்வையால் மேஷராசிக்காரர்களுக்கு என்ன நடக்கும். 

குருவிற்கு சொந்த வீடான தனுசு மற்றும் மீனம் மேஷராசிக்கு 9ஆம் மற்றும் 12ஆம் வீடாக அமைக்கிறார். 9ஆம் வீடு பாக்கியஸ்தானம் 12ம் வீடு விரையஸ்தானம், இதனால உங்களுக்கு அதிகமான செலவுவரும் அந்த செலவு எல்லாமே வீண் செலவாக அமையாம பயனுள்ள வகையில்தான் இருக்கும் அதாவது நிலம் , வீடு, போன்ற அசையா சொத்துக்கள் வாங்குவதற்காக அதிகம் செலவு செய்வீர்கள், இதற்காக கடன் வாங்க நேரலாம் . இல்லையென்றால் மங்களகரமான சுபச்செலவுகள் குறிப்பாக திருமணத்திற்கு மிகவு பிரமாண்டமாக தடபுடலா அதிகம் செலவு செய்வீர்கள், பழைய வாகனம் இருந்தா உடனே மாற்றி புதியவாகனம் வாங்க நினைப்பீர்கள், வீட்டில் உள்ள பொருட்டாக்களைக்கூட மாற்ற நினைப்பீர்கள் பழைய வாஷிங் மெசினை மாற்றி புதிய வாஷிங் மெஷின் , பழைய பிரஜை மாற்றி புதிய பிரிட்ஜ் என செலவு செய்வீர்கள், எவ்வளவு செலவுகள் உங்களுக்கு வந்து கொண்டே இருந்தாலும் பண வரவு குறையாது வந்துகொண்டே இருக்கும், மேஷராசிக்காரர்கள் எவ்வளவு செலவு செய்தாலும் அது உங்களுக்கு ஒரு பயனுள்ள அசையா சொத்தாகவும் இருக்கும். 


இக்குரு பெயர்ச்ச்சியின் பலன்களில் சொல்லப்பட்டது அனைத்தும் மேஷராசிக்காரர்களுக்கு சாத்தியம் இல்லை. இது மேஷராசிக்கான பொதுபலன்  சில நடக்கும் சிலவை நடக்காது காரணம். உங்களின் ஜாதகத்தில்  தசா மற்றும் புத்திக்கு ஏற்றாற்போல் மாற்றம் உண்டு. ஒருவரின் ஜாதகமே அவரின் முழுமையான பலாபலனை சொல்லக்கூடியது.

No comments:

Post a Comment