2018-ம் ஆண்டின் மிதுனம் இராசியின் குரு பெயர்ச்சி பலன்
04.10.2018 அன்று இரவு 10.00 மணிக்கு குரு துலாம் இராசியில் இருந்து விருட்சக இராசிக்கு போகிறார். இந்த குரு பெயர்ச்சி 27.10.2019 வரை இந்த பலன்கள். குரு மிதுனராசியை 8-ம் பார்வை செலுத்துகிறார். இந்த 8-ம் ஆயுளை குறிக்கின்றது. இந்த 8-ம் பார்வைமூலம் குரு என்னலாம் செய்வார் என்பதை பார்க்கலாம்.
குருவிற்கு சொந்த வீடான தனுசு மற்றும் மீனம் மிதுனராசிக்கு 7ஆம் மற்றும் 10ஆம் வீடாக அமைக்கிறார். அதிக நன்மையை செய்யர கிரஹம் குரு. குரு மறைவு ஸ்தானத்த்திற்கு வரதால புதிய புதிய பிரச்சனையெல்லாம் தருவார். அதிகமா உழைக்கனும், கடினமா உழைக்கனும் அந்த உழைப்புக்கெல்லாம் இரட்டிப்பு பலனை தருவார். எடுத்த காரியம் எல்லாம் ஜெயம், உடல்நலம் நன்றாக இருக்கும். உறவினர் நண்பர்கள் பக்கப்பலாமாக இருப்பதால் அனைத்திலும் வெற்றி தான் . எவருக்கும் ஆலோசனை வாங்காதீர்கள் , வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டிகூட இருக்கும். இடமாற்றம் அதிகமாக இருக்கும், கோவம் கொள்வதை குறைத்து, சிரிப்போடு இருக்கனும், சுயத்தொழில் செய்வபர்க்கு மிகச்சிறந்தது, குடும்ப கடன் எல்லாத்தையும் அடச்சுட்டுவீங்க, குடும்பம் ரெம்ப சந்தோசமா இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு ரெம்ப சீக்கிரமாகவே திருமணம் ஆயிடும். வீடு இல்லாதவங்க சிறிய வீடாவது வாங்கி சொந்த வீட்டிற்கு போயிடுவாங்க. இவங்களுக்கு படிப்பு கைவந்த கலை, இந்த ஆண்டு மிதுன இராசி மாணவர்கள் கொங்சம் நல்ல படிச்சா தேர்வில் முதல் மதிப்பெண் பெற வாய்ப்பு உண்டு. பெண்கள் நகைகள் வாங்குவாங்க, செலவுகள் அதிகமா இருப்பதால் அதை சுப செலவுகளாக மாற்றி கொள்வது நல்லது, எவருக்கும் ஜாமின் கையெழுத்து போடா வேண்டாம், பேச்ச குறைத்துக்கொண்டாள் வரக்கூடிய பிரச்சனையை தவிர்க்கலாம்.
இக்குரு பெயர்ச்ச்சியின் பலன்களில் சொல்லப்பட்டது அனைத்தும் மிதுனராசிக்காரர்களுக்கு சாத்தியம் இல்லை. இது மிதுனராசிக்கான பொதுபலன் சில நடக்கும் சிலவை நடக்காது காரணம். உங்களின் ஜாதகத்தில் தசா மற்றும் புத்திக்கு ஏற்றாற்போல் மாற்றம் உண்டு. ஒருவரின் ஜாதகமே அவரின் முழுமையான பலாபலனை சொல்லக்கூடியது.
இக்குரு பெயர்ச்ச்சியின் பலன்களில் சொல்லப்பட்டது அனைத்தும் மிதுனராசிக்காரர்களுக்கு சாத்தியம் இல்லை. இது மிதுனராசிக்கான பொதுபலன் சில நடக்கும் சிலவை நடக்காது காரணம். உங்களின் ஜாதகத்தில் தசா மற்றும் புத்திக்கு ஏற்றாற்போல் மாற்றம் உண்டு. ஒருவரின் ஜாதகமே அவரின் முழுமையான பலாபலனை சொல்லக்கூடியது.



No comments:
Post a Comment