சபரிமலை ஐயப்பன் கோவிலின் புனிதத்தை காக்க கோரியும், அங்கு செல்லும் பக்தர்களை காக்க கோரியும் பா.ஜா.கா.வினர் இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இது கேரளா அரசின் பிரச்சனை இதற்காக இங்கு பந்து நடத்து தேவையற்றது. யாரேனும் அதிகாரத்தை கையில் எடுத்து துஸ்பிரயோகம் செய்தால் சட்டம் அவர்கள் மீது பாயும், கடைக்காரர்களை கடையை அடைக்க சொல்லி மிரட்டினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் புதுவையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மற்றும் தமிழக அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன, வன்முறைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க எண்ணற்ற போலீசாரை குவித்துள்ளனர்.
இந்நிலையில் புதுவையில் 3 தமிழக அரசு பேருந்துகள் மீது கல் வீசி கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன இது தொடர்பாக 4 பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



No comments:
Post a Comment