Tamil News Trends

தினசரி முக்கிய செய்தியை தமிழ் வழி காண " Tamil News Trends"

ad728

Breaking

Wednesday, 14 November 2018

வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன் திருப்தி தேசாய் பெண் ஆர்வலர். "யாரும் தடுக்க முடியாது."


வரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன் திருப்தி தேசாய் பெண் ஆர்வலர் செல்வதாக கூறியுள்ளார். அவர் செல்வதற்காக பாதுகாப்பு கேட்டு முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழிதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள ஹாஹி அலி தர்ஹாவில் பெண்கள் நுழைய தடை இருந்தது. அதை கையில் எடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து,அதில் வெற்றி பெற்று  பெண்கள் ஹாஹி அலி தர்காவில் நுழைய அனுமதி பெற்று தந்தார்.


இதை தொடர்ந்து ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள்  செல்ல நூற்றாண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை  எதிர்த்து இளம் வழக்கறிஞகர்களுடன் இணைந்து பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அனைத்து பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று ஐயப்பன் தரிசனம் காணலாம் என்று தீர்ப்பளித்தது.

ஆனால் இந்த தீர்ப்பிற்கு எதிராக பெண்கள் மத்தியில் கேரள மட்டும் இன்றி தமிழகத்திலும் மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. கேரளாவில் நிறைய இடங்களில் இதற்கு எதிராக பேரணிகள் நடைபெற்றன. 

இந்த மனுவை மறுஆய்வு செய்ய தாக்கல் செய்யப்பட்ட மறு  சீராய்வுக்கு  ஜனவரி மாதம் விஜரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம் ,  பெண்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment